அடுத்தடுத்து தோல்வி.. 8வது முறையாக தொடர்ச்சி தோல்வியில் மும்பை : ராகுலின் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 11:40 pm
LSG Won - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதியது. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் டி காக் 9 ரன்கள், மனிஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில், பின் களமிறங்கியவர்கள் சொதப்பி வந்த நிலையில், கே.எல்.ராகுல் அவர்கள் 61 பந்துகளில் சதம் விளாசி மும்பை அணியை மிரள வைத்தார்.

20 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்ததனர். தொடர் தோல்வியை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, 169 ரன்களை எதிர்த்து விளையாடியது.

முதலில் களமிறங்கிய ரோஹித் – இஷான் இணை பொறுமையாக விளையாடியது. ஒரு பக்கம் அதிரடி காட்டினார் ரோஹித். ஆனால் இஷான் 20 பந்துகளில் 8 ரன் எடுத்து அவுட் ஆனார்.

மறுபக்கம் இருந்த ரோஹித் 39 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ப்ரெவிஸ் 3 ரன்னில் அவுட்டாக, சூர்யகுமார் யாதவ்கூம் 7 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய வர்மா அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இறங்கிய பொலார்டு பொறுமையாக விளையாடினார். ஆனால் வர்மா 38 ரன்னில் பெவிலியன் திரும்ப 5 விக்கெட் இழப்புக்கு மும்பை 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

19 ஓவரில் போலார்ட் 19 ரன்னில் வெளியேறினார். 131 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி, அதே ஓவரில் உனத்கட் ரன் அவுட் ஆனார். 8 விக்கெட் இழப்புக்கு132 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்து 8வது முறையாக தோல்வியடைந்தது.

Views: - 1201

0

0