ஸ்டீவ் வாக்கின் ஆஸி., டீமையே மிஞ்சிய கோலியின் இந்திய அணி: கவாஸ்கர்!

4 March 2021, 7:38 pm
Quick Share

இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியைவிடவும் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை விடவும் சிறந்த அணி என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இவரது தலைமையிலான இந்திய அணி குவிக்கும் வெற்றியைப் பார்ப்பதால் இந்த அணி பல முன்னாள் சிறந்த வீரர்கள் அடங்கிய அணிகளுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. கிரேம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி எனப் பல சிறந்த அணிகளுடன் இந்திய அணியைப் பலரும் ஒப்பிட்டுப் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், கோலி தலைமையிலான இந்திய அணியைப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், “கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிறப்பான அணி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்கள் தொடர்ச்சியாகப் பெறும் வெற்றிகள் அதை உறுதி செய்யும் விதமாக இருக்கிறது. கடந்த 90களில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி போல தற்போதைய கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது.

அதேபோல கிளைவ் லாய்ட் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரைன் லாரா போன்ற கேப்டன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது போலக் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது உள்ளது. இது போன்ற சிறந்த அணி உள்ளது என்பதே ஒரு மிகப்பெரிய வரலாறு. கடந்த 1970 மற்றும் 1980களில் அந்த அணி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்தது. அதேபோல கோலி தலைமையிலான இந்திய அணி எந்த இடத்திலும் வெல்லும் தகுதி படைத்ததாக உள்ளது.

ஆஸ்திரேலிய தொடரின் போது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் என அனைத்து சிறந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த மிகப்பெரிய சவால்களை எளிமையாகத் தாண்டி இந்திய அணி நிரூபித்துள்ளது. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் பொழுது இடம்பெற்றிருந்த அணியிலேயே இதுதான் மிகச் சிறந்த அணி என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார்.

Views: - 1

0

0