பட்டைய கிளப்பிய பட்லர்… சதம் அடித்து அசத்தல்: ஐதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

2 May 2021, 5:16 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பட்லர் ஐபிஎல் அரங்கில் முதல் சதம் விளாசி அசத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் அடித்து அசத்தியது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இதுவரை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், சுசீத் மற்றும் சித்தார்த் காவுல் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது நபி, புவனேஸ்வர் குமார், மற்றும் அப்துல் சமாத் அணியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உனத்கத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தியாகி அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் சிவம் துபேவிற்கு பதிலாக அனுஜ் ரவாத் வாய்ப்பு பெற்றார்.

பட்லர் பிரமாதம்
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர் ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வல் ஆகியோர் நல்ல துவக்கம் அளித்தனர். இந்நிலையில் 12 ரன்கள் எடுத்த போது ஜெய்ஸ்வால் ரசித் கான் சூழலில் சிக்கி வெளியேறினார். பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மறுமுனையில் பட்லர் அதிரடியாக ரன்கள் சேர்க்க துவங்கினார்.

நழுவிய அரைசதம்
ஐதராபாத் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார் பட்லர். மறுமுனையில் சாம்சன் விஜய்சங்கர் ஓவரில் தலா ஒருபவுண்டரி, ஒரு சிக்சர் என அடித்து கைகொடுத்தார். இந்நிலையில் சாம்சன் 48 ரன்னில் அவுட்டானார். நபி ஓவரில் இரண்டு சிக்சர் இரண்டு பவுண்டரி என விளாசிய பட்லர் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 4 சதம் விளாசிய நான்காவது இங்கிலாந்து வீரர் ஆனார்.

நான்காவது வீரர்
முன்னதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன், பென் ஸ்டோக்ஸ்(இரண்டு முறை), ஜானி பேர்ஸ்டோவ் என இங்கிலாந்து வீரர்கள் சதம் விளாசி அசத்தியுள்ளனர். தற்போது பட்லர் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து வந்த ரியான் பராக் தன் பங்கிற்கு வந்த வேகத்தில் புவனேஸ்வர் குமார் பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.

ஹாட்ரிக் சிக்சர்
எதிர்முனையில் தொடர்ந்து எதிர் முனையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பட்லர், சந்தீப் சர்மா வீசிய போட்டியின் 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் பறக்கவிட ராஜஸ்தான் அணி எளிதாக 200 ரன்களை கடந்தது. அதே ஓவரின் கடைசி பந்தில் பட்லர் போல்டானார். இவர் 64 பந்தில் 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் என மொத்தமாக 124 ரன்கள் அடித்து அவுட்டானார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது.

Views: - 112

0

0

Leave a Reply