இமாலய வெற்றியோடு பிளே ஆஃப்பிற்குள் அடியெடுத்து வைத்த ஐதராபாத் : மும்பையின் மோசமான ஆட்டம்… கொல்கத்தா ஏமாற்றம்..!!

3 November 2020, 11:18 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஐதராபாத் அணி, பிளே ஆஃப்பிற்கு முன்னேறியது.

சார்ஜாபில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணி, ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டைக்களை இழந்தது. பொல்லார்டு (41), சூர்யகுமார் யாதவ் (36), இஷான் கிஷான் (33) ஓரளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்த, மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.

வாழ்வா, சாவா ஆட்டத்தில் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் வார்னர் (85), சஹா (58) ரன்களும் சேர்த்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர். 10 விக்கெட் வித்திசாயத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி, பிளே ஆஃப்பிற்கு 4வது அணியாக முன்னேறியது.

இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்ததால், கொல்கத்தா அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Views: - 29

0

0