டெல்லியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி : முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஐதராபாத்..!!

29 September 2020, 11:35 pm
Quick Share

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஐதராபாத்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, வழக்கம் போல வார்னரும், பேர்ஸ்டோவும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 77 ஆக இருந்த போது, வார்னர் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டேவும் ஏமாற்றம் கொடுத்தார். பிறகு பேர்ஸ்டோவ் (53), வில்லியம்சன் (41) ரன்களை குவித்து அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

முதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பந்து வீசிய ஐதராபாத் அணி, டெல்லி அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால், முன்னணி விக்கெட்டுகளை இழந்து, ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது. இருப்பினும், தவான், ரிஷப் பந்த் ஆகியோர் போராடினர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 15 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்ற ஐதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Views: - 5

0

0