பூரணின் அதிவேக அரைசதம் வீண் : பஞ்சாப் அணிக்கு மேலும் ஒரு தோல்வி..! கடைசி இடத்திலேயே நீடிப்பு

Author: Udayaraman
8 October 2020, 11:32 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பேர்ஸ்டோவ் கிடைத்த பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டு, வானவேடிக்கை காட்டினர். இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 15 ஓவர்களுக்கு 160 ரன்கள் சேர்த்திருந்த போது, வார்னர் (52), பேராஸ்டோவ் (97) ரன்களில் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தனர்.

இதைத்தொடர்ந்து, விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியதால் ரன் விகிதம் குறைந்தது. இருப்பினும் வில்லியம்சன் (20) மட்டும் பொறுப்பாக ஆடி, அணியின் ஸ்கோரை 6 விக்கெட் இழப்பிற்கு 201 ஆக உயர்ந்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இருப்பினும், பூரண் மட்டும் தனி ஒரு ஆளாக நின்று போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 17 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் அரைசதம் விளாசினார். இது நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேக அரைசதமாகும். பின்னர் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் பஞ்சாப் அணியால் 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி வரை வெற்றிக்காக போராடிய பூரண் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Views: - 44

0

0