ஐபிஎல் ரத்து செய்தால் ரூ. 4,000 கோடி இழப்பு : மனம் திறந்தது பிசிசிஐ

12 May 2020, 6:11 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டால் ரூ. 4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2007-ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வரும் அக்டோபர் மற்றும் நவம்பரில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்படும்பட்சத்தில், ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால், 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.