‘தல’யை தொடர்ந்து குட்டி ‘தல’யும் ஓய்வை அறிவித்தார்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…!

15 August 2020, 9:08 pm
Raina_Dhoni_- updatenews360
Quick Share

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை தொடர்ந்து ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் மற்றும டி20 தொடரில் இருந்து தற்போது ஓய்வு அறிவித்துள்ளார்.

தல தோனியின் முடிவால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்திருத்திருப்பது ரசிகர்களுக்கு தாளத துயரத்தை வழங்கியுள்ளார்.

தோனியும், ரெய்னாவும் இந்திய அணிக்காக மட்டுமல்ல, ஐபிஎல்லில் சென்னை அணிக்காக இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகின்றனர்.

Views: - 29

0

0