‘நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை’ : சென்னை அணியினருக்கு ரெய்னா கூறிய வாழ்த்து செய்தி..!

19 September 2020, 5:48 pm
Dhoni-raina-updatenews360
Quick Share

கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, பலத்த மருத்துவ பாதுகாப்புடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. ரசிகர்களின்றி நவம்பர் 10ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காகவே 8 அணியின் வீரர்கள், பயிற்சிகள், அணியின் ஊழியர்கள் என அனைவரும் கடந்த மாதம் இறுதியிலே அபுதாபி சென்றடைந்து விட்டனர்.

இந்த நிலையில், அபுதாபியில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் விலகியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று மும்பை அணியை எதிர்கொள்ளும் சென்னை அணிக்கு, ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” அனைத்தும் வெற்றி பெற சென்னை அணியின் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய நாளில் நான் அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சிறந்த உணர்வுகளுடன் உங்களை வழியனுப்புகிறேன். வெற்றி பெற்று வாருங்கள், விசில் போடு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0