சந்தேகத்தில் சின்ன தல ரெய்னா: இவர்களை எல்லாம் கழட்டிவிடும் சிஎஸ்கேவின் ‘மாஸ்டர் பிளான்’!

13 January 2021, 12:50 pm
Quick Share

வரும் 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும், கழட்டிவிடும் வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2020ல் நடந்த ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்தது. இதுவரை பங்கேற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே முதல் முறையாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் முதல்முறையாக வெளியேறியது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் 7வது இடம் பிடித்து மோசமான நிலையை நிலையுடன் தொடரை முடித்தது. கடந்தாண்டு துவக்கத்தின் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சிக்கல்களை எதிர் கொண்டது. அந்த அணியின் முன்னணி வீரர்களாக கருதப்படும் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தொடக்கத்திலேயே சொந்த காரணங்களுக்காக விலகிக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வட் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதேநேரம் கேப்டன் தோனியும் தனது பேட்டியில் தடுமாறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் 2021 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு மாற்றங்களைச் செய்ய உள்ளது. வாட்சன் ஓய்வு பெறுவதால், அவரின் வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வசம் வெறும் ரூபாய் 15 லட்சம் மட்டுமே உள்ளதால் ஏலத்தில் ஒரு வீரரைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஏலத்தில் ஒரு வீரரின் அடிப்படை தொகையின் விலை ரூபாய் 20 லட்சம் ஆகும். இதனால் சென்னை அணி தங்கள் அணியில் உள்ள வீரர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலில் தோனி, சாம் கரன், அம்பத்தி ராயுடு, ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், மிட்செல் சான்ட்னர் ஆகியோரை தக்கவைக்கும் எனத் தெரிகிறது. ஆனால் கடந்த ஆண்டில் விலகிய ரெய்னா ஹர்பஜன் சிங் ஆகியோரின் ஒப்பந்தத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்வது சந்தேகம் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் ரெய்னா சென்னை பேட்டிங் வரிசை எண் முக்கிய வீரராக உள்ளதால் அவர் தக்கவைக்கப்படுவார் எனத் தெரிகிறது. தற்போது விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலில் கேதார் ஜாதவ், கரண் ஷர்மா, இம்ரான் தாஹிர், பியூஸ் சாவ்லா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

பியூஸ் சாவ்லா கடந்த 2020 ஏலத்தின் போது ரூபாய் 6.5 கோடிக்குச் சென்னை அணி ஏலத்தில் எடுத்தது கரண் ஷர்மா 5 கோடிக்கும் 7.8 கோடிக்கு ஏலத்தில் சென்னை அணி எடுத்தது. தற்போது ஷேன் வாட்சன் ஓய்வு பெறுவதாலும் இந்த மூன்று வீரர்களை விடுவிப்பதாலும் சென்னை அணியின் கைவசம் நல்ல தொகை இருப்பு இருக்கும். இதனால் இந்த ஏலத்தில் பங்கேற்று மீண்டும் ஒரு இளம் வீரர்கள் அடங்கிய அணியை உருவாக்க உருவாக்க முடியும் என்பதால் இந்த வீரர்களை விடுவிக்கச் சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்:

தோனி (கேப்டன்), அம்பதி ராயுடு, ஆசிப், தீபக் சஹார், டுவைன் பிராவோ, டுபிளசி, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண், கரண் சர்மா, கேதர் ஜாதவ், லுங்கி நிகிடி, மிட்சல் சாண்ட்னர், மோனு சிங், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வட், ஷேன் வாட்சன், சார்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா, ஜாஸ் ஹசில்வுட், ப்யூஸ் சாவ்லா, சாய் கிஷோர், சாம் கரண்.

Views: - 7

0

0