சையத் முஷ்டாக் அலி டிராபி : நாக் அவுட் சுற்றில் தமிழக அணி…!!!

25 January 2021, 7:00 pm
tamilnadu team - updatenews360
Quick Share

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் காலிறுதிக்கு தமிழகம் அணி முன்னேறியுள்ளது.

50 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர், கடந்த 10ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாக் அவுட்டான காலிறுதி சுற்றுக்குள் 8 அணிகள் அடியெடுத்து வைத்துள்ளன.

லீக் போட்டிகளில் தோல்வியையே தழுவாத தமிழக அணி, காலிறுதியில் தமிழ்நாடு – இமாச்சல பிரதேச அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இதேபோல, கர்நாடகா – பஞ்சாப், ஹரியானா – பரோடா, பீகார் – ராஜஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்த லீக் போட்டிகள் அனைத்தும் சர்தார் படேல் மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளில், தினமும் இருபோட்டிகளாக நடத்தப்படுகின்றன.

29ம் தேதி 12 மற்றும் இரவு 7 மணிக்கு என இரு அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. 31ம் தேதி இறுதி போட்டி நடக்கவிருக்கிறது.

Views: - 1

0

0