ஷாருக்கானின் சூப்பர் ஹிட்… 3வது முறையாக கோப்பையை முத்தமிட்ட தமிழக அணி.. நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த கர்நாடகா..!!

Author: Babu Lakshmanan
22 November 2021, 5:14 pm
Tn champion - updatenews360
Quick Share

சையது முஸ்தக் அலி கிரிக்கெட் தொடரில், கடைசி பந்தில் ஷாருக்கான் அடித்த சிக்சரின் மூலம் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சையது முஸ்தக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கர்நாடகா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் சேர்த்தனர். தமிழக அணி தரப்பில், சாய் கிஷோர் 3 விக்கெட்டுக்களும், வாரியர், நடராஜன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு, ஹரி நிஷாந்த் (23), ஜெகதீசன் (41) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், டிபின்னர் வந்த வீரர்கள் சொதப்பினர். இதனால், வெற்றி கர்நாடகம் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் தமிழகம் அணி வெற்றிக்கு, 16 ரன்கள் தேவைப்பட்டது. சாய் கிஷோரும், ஷாருக்கானும் களத்தில் இருந்தனர். 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த நிலையில், பிரதீக் ஜெயின் வீசிய அந்தப் பந்தை தமிழக வீரர் ஷாருக்கான் சிக்ஸருக்கு பறக்க விட்டு, தமிழக அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். இதன் மூலம், 3வது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டார்.

Views: - 280

0

0

Leave a Reply