20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு தொகை அறிவிப்பு
Author: kavin kumar10 October 2021, 9:06 pm
20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 12.02 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி முதலில் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாகப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவின் பெயரிலேயே இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதிவரை உலக கோப்பை டி.20 போட்டிகள் நடைபெறுகிறது. ஐ.பி.எல் தொடர் முடிந்த உடனே அந்தந்த நாட்டு வீரர்கள் துபாயிலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகிறார்கள். இங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 12.02 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் டி-20 உலகக்கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடி பரிசு தொகையும், டி-20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கும் தலா ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடைந்து வெறும் 8 அணிகளுக்கு தலா ரூ.52 லட்சம் பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசாக வழங்கப்படும். கடந்த 2016ம் ஆண்டைப் போல் சூப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும். போட்டி நடக்கும்போது இடைவெளி விடுதலுக்கு நேரத்தை ஐசிசி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு இன்னிங்ஸ் நடுப்பகுதியிலும் 2.30 நிமிடங்கள் இடைவெளிவிடப்படும் என அறிவித்துள்ளது.
0
0