டி20 உலகக்கோப்பை : பஞ்சராகி போன பப்புவா நியூகினியா.. 10 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அபார வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 8:31 pm
Oman Won - Updatenews360
Quick Share

ஓமன் அணி 13.4 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்க நாளான இன்று முதல் போட்டியில் பி பிரிவில் உள்ள ஓமன் -பப்புவா நியூகினியா அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, முதலில் பப்புவா நியூகினியா அணியில் தொடக்க வீரர்களாக லெக சியாகா, டோனி உரா களமிறங்கினர். இருவரும் களமிறங்கிய அடுத்த சில நிமிடங்களில் ரன் எடுக்காமல் போல்ட் ஆகி டக் அவுட் ஆனார்கள். அடுத்து சார்லஸ் அமினி 37 ரன்னும், கேப்டன் அசாத் வாலா 57 ரன்னும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

T20 World Cup 2021 - Assad Vala wants Papua New Guinea to become World Cup  regulars

இறுதியாக பப்புவா நியூகினியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் எடுத்தனர். ஓமன் அணியில் கேப்டன் ஜீஷன் மக்சூத் 4 விக்கெட்டையும், பிலால் கான், கலீமுல்லா தலா 2 விக்கெட்டை பறித்தனர். 130 ரன்கள் இலக்குடன் ஓமன் அணியில் தொடக்க வீரர்களாக அகிப் இலியாஸ், ஜதிந்தர் சிங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால், இருவரும் அரைசதம் விளாசினர்.

இறுதியாக ஓமன் அணி 13.4 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அகிப் இலியாஸ் 50, ஜதிந்தர் சிங் 73 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றனர்.

Views: - 583

0

0