டி20 உலகக் கோப்பை தொடர் : பயிற்சி ஆட்டத்தில் ஆஸி., அணியை சிதறடித்த இந்திய அணி : 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 8:08 pm
Ind Vs Aus -Updatenews360
Quick Share

இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் வார்னர், 7 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஃபின்ச் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக களம் கண்ட மிட்சல் மார்ஷ் டக் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலிய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 57, மேக்ஸ்வெல் 37 ரன்கள் எடுக்க இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 39 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரோகித் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்த போது காயம் காரணமாக வெளியேறினார். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 8 வந்து 14 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 17.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை களத்தில் சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களுடனும் இருந்தனர்.

Views: - 576

0

0