சையது முஸ்தாக் அலி தொடரிலிருந்து தமிழக வீரர் முரளி விஜய் விலகல்!

20 December 2020, 2:43 pm
Murali Vijay - Updatenews360
Quick Share

உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி தொடரிலிருந்து தமிழக வீரர் முரளி விஜய் விலகியுள்ளார்.

உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடர் வரும் ஜனவரி 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் நடக்கவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட உத்தேச அணியைத் தமிழ்நாடு கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. அதில், சரியான பார்ம் இல்லாமல் தவிக்கும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த தொடரிலிருந்து தமிழக வீரர் முரளி விஜய் விலகுவதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,“முரளி விஜய் தனது சொந்த காரணங்களுக்காக விலகிக்கொள்வதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அதைத் தவிர அவர் வேறு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை” என்றார்.

முரளி விஜய கடைசியாக 2019இல் நடந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் கர்நாடகா அணிக்கு எதிராக திண்டுக்கலில் நடந்த போட்டியில் பங்கேற்றார். பின் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் முரளி விஜய்க்குப் பதிலாக சூர்யபிரகாஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல வேகப்பந்துவீச்சாளர் விக்னேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரும் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். விக்னேஷுக்கு பதிலாக ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கவிருந்த பயிற்சி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ஜார்கண்ட் அணியை எதிர்கொள்கிறது.

Views: - 1

0

0