கடைசி நேரத்தில் மிரட்டிய ஆர்ச்சர்… சுதாரித்த சார்துல்… இந்தியா த்ரில் வெற்றி!

18 March 2021, 11:32 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி -20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது டி-20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சூர்ய குமார் யாதவ் (57) அரைசதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜாஸ் பட்லர் (9) புவனேஸ்வர் குமார் வேகத்தில் வெளியேறினார். ஜேசன் ராய் (40) ஓரளவு கைகொடுத்தார். அடுத்து வந்த மலான் (14), ஜானி பேர்ஸ்டோவ் (25) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் (46) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின் வரிசை விரர்கள் சொதப்ப இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டும் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது. இரு அணிகள் மோதும் கடைசி டி -20 போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Views: - 62

0

0