கடுமையான தனிமைப்படுத்துதல்… இந்திய வீரர்களைப் போல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும் கோரிக்கை!

20 January 2021, 10:08 pm
Quick Share

மெல்போர்ன்: உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சின் கடிதம் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்

ஆஸ்திரேலியாவில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களைப் போலக் கடுமையான தனிமைப்படுத்துதல் முறையைப் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற வீரர்கள் பயணித்த விமானத்தில் வந்த சிலருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டதால் 72 வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறைகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் இந்த தொடருக்கான பயிற்சியில் கூட ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தனிமைப்படுத்தப்படும் கால அளவை குறைக்க வேண்டும் என்றும் அதே போல ஹோட்டல் அறைகளுக்கு பதிலாக டென்னிஸ் மைதானம் கொண்ட தனி வீடுகளுக்கு வீரர்களை அனுப்பவேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஜோகோவிச்சின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்டது போல கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக ஆஸ்திரேலிய ஓபன் தலைமை அதிகாரி டிலே கூறுகையில் அது வெறும் பரிந்துரைகள் மட்டும் தான். அவரிகளின் கோரிக்கைகள் அல்ல என்றார். இதற்கிடையில் தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜோகோவிச் மிகப்பெரிய விளக்கம் ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் ஜோகோவிச், “என் சக போட்டியாளர்களின் மீது கொண்ட நல்ல எண்ணத்தில் கேட்ட விஷயங்க ள் அனைத்தும் தவறுதலாகச் சுயநலமாகவும் மதிப்பு குறைவானதாகவும் மாற்றிப்புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 4

0

0