38 வயதிலும் அனல் வேகத்தில் அசத்தும் ஆண்டர்சன்: டெஸ்ட் அரங்கில் புது மைல்கல்!

23 January 2021, 5:23 pm
england anderson - updatenews360
Quick Share

ஓய்வுபெறும் வயதை நெருங்கி வரும் நிலையிலும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் புது மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் தற்போது நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் 30 ஆவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

சர்வதேச அரங்கில் 38 வயதில் ஓய்வு பெறும் திட்டம் குறித்து வேகப்பந்து வீச்சாளர்கள் தீட்டும் நிலையில் தற்போது இந்த வயதில் தொடர்ந்து அசத்தி வருகிறார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த போட்டியில் மொத்தம் 6 விக்கெட் வீழ்த்திய இவர் இலங்கை மண்ணில் நடந்த டெஸ்டில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சிறந்த பந்து வீச்சைப் பதிவு செய்து அசத்தினார். இரண்டாவது நாளான இன்று ஜேம்ஸ் ஆண்டர்சன் 30 முறையாக டெஸ்ட் அரங்கில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முன்னதாக இலங்கை அணிக்கு மேத்யூஸ், சண்டிமல், டிக்வெலா ஆகியோர் கைகொடுக்க இலங்கை அணி 381 ரன்கள் எடுத்தது. இந்த சிறப்பான பந்துவீச்சு மூலம் வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான் என்பதை ஆண்டர்சன் அழுத்தமாக நிரூபித்துள்ளார். குறிப்பாக இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் பாட்னர்ஷிப் உருவாக்க நினைத்தபோது அந்த அணியின் முக்கியமான வீரர்களை வெளியேற்றி இங்கிலாந்து அணிக்கு பெரும் உதவியாக இருந்தார் ஆண்டர்சன்.

அதேபோல இந்த போட்டியில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன் ஆசிய மண்ணில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். இலங்கை மண்ணில் நடந்த டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் இவர். பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் மற்றும் முகமது அசிப் ஆகியோர் இலங்கை மண்ணில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் தொடர்ந்து 15வது ஆண்டாக ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்து வருகிறார். இதற்கிடையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனலில் இங்கிலாந்து அணி இடம்பெற எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ஆண்டர்சன் முன்னிலையில் உள்ளார்.

Views: - 5

0

0