சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு மோசமான சரிவைச் சந்தித்துள்ள இந்திய டீம்!

15 January 2021, 8:18 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணி சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தங்களின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கூட இல்லாமல் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் துவங்கியது முதலே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா காயம் காரணமாக இதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற போது இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் காயமடைந்து பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத பவுலர்களை கொண்டு களமிறங்கியுள்ளது இந்திய அணி. இதன் மூலம் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக தங்களின் பிரதான பவுலர் இல்லாமல் முதல் முறையாகப் போட்டியில் பங்கேற்று மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

இதன் விளைவாக முதல் நாள் ஆட்டம் ஆஸ்திரேலிய அணி வசம் திரும்பியது. முன்னதாக கடந்த 2012 இl இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற போது, ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானை மட்டும் கொண்டு களமிறங்கியது. இவரைத் தவிர்த்து அந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன்சிங் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கை ஐந்தாவது பவுலராக அந்த போட்டியில் பயன்படுத்தியது. இதற்குப்பின் தற்போது தான் முதல் முறையாக இந்திய அணி இப்படி முன் அனுபவம் இல்லாத பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது.

தற்போது நிலைமை படுமோசமாக உள்ளது. ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் கூட போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்திய அணி இந்திய அணியில் ஜாகிர் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்த நான்கு பவுலர்களை தவிர்த்து ஒரு சில போட்டிகளில் பங்கேற்று உள்ளனர். ஆனால் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒரு போட்டியைக் கூட தவற விடாமல் இவர்களில் ஒருவர் இந்திய அணிகள் தொடர்ந்து பங்கேற்றுள்ளனர்.

தற்போது இந்திய அணி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த அனுபவமும் இல்லாத பவுலர்களை கொண்டு மட்டுமே களமிறங்கியுள்ளது. இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது இதனால் போட்டியின் முடிவு ஆஸ்திரேலிய அணி வசம் திரும்ப அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Views: - 4

0

0