சேபாக்க மைதானத்தில் கில்லி மாதிரி பயிற்சியை துவங்கிய இந்திய டீம்!

1 February 2021, 9:51 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காண பயிற்சியை இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கினார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் நடக்கிறது. இதில் விடுப்பிலிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் காயத்திலிருந்து குணமடைந்தது இஷாந்த் சர்மா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையில் சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் சுமார் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் இன்று தங்களின் பயிற்சியை துவங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த பயிற்சியை பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஆறுநாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் சேப்பாக்கத்தில் வெளியில் பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்” என அதில் குறிப்பிட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் இதுதான்.
முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு முழுவதுமாக இந்தியாவில் இந்த தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்னர் நடக்கவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் சென்னை, அகமதாபாத் மற்றும் புனேவில் நடக்கிறது. கடைசியாக இந்தியாவில் இங்கிலாந்து அணி பங்கேற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என கைப்பற்றியது. ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணி கடைசியாக பங்கேற்ற நான்கு தொடர்களையும் என்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை என கடைசியாக பங்கேற்ற நான்கு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Views: - 0

0

0