இந்தியாவிற்காக இதைச் செய்வதைவிட வேறு எதுவும் பெரிதல்ல: ரிஷப் பண்ட்!

24 January 2021, 3:16 pm
Risabh Pant - Updatenews360
Quick Share

இந்திய அணிக்கு வெற்றியைப் பரிசளிப்பதைவிட வேறு எதுவும் தனக்கு பெரிதல்ல என விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் . பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றிக்கு முன்னதாக நடந்த சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பவுலர்களை மிரட்டினார் பண்ட். இதற்கிடையில் தற்போது தனது ஆட்டம் குறிப்பு பேசியுள்ளார் பண்ட்.

இதுகுறித்து பண்ட் கூறுகையில், “கடந்த 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நான் அவுட்டானது எனக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. அது மிகப் பெரிய அரங்கில் இந்திய அணிக்காக விளையாட எனக்கு கிடைத்த வாய்ப்பாகும். இது போன்ற மிகப்பெரிய தருணம் எனக்கு மீண்டும் வாழ்வில் கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது.

எப்போதும் இந்திய அணிக்காக கடினமான நேரத்தில் வெற்றியை வெற்றி பெறச் செய்வதே எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. நான் எப்போதும் எனக்கான சொந்த ரன்களை சேர்க்க விரும்பவில்லை. எப்பொழுதும் இந்திய அணியின் வெற்றிக்கான ரன்களை சேர்க்க விரும்புகிறேன். அது வெறும் 20 ரன்களாக இருந்தாலும் சரி அல்லது மிகச் சிறந்த கேட்ச்சாக இருந்தாலும் சரி. ஆனால் உலக கோப்பை அரை இறுதியில் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

சிட்னி போட்டியில் 97 ரன்களில் அவுட்டான போதும் கூட எப்படியும் இந்த போட்டியை வென்று விடலாம் இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதற்காக 2 அல்லது 3 ஊசிகளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்வதில் எனக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. அந்த வாய்ப்பை தவற விட்டதால் பிரிஸ்பேனில் எப்படியும் இறுதிவரை நின்று போட்டியை வெற்றிபெற செய்தாக வேண்டும் என எனக்குள் கூறிக் கொண்டுதான் விளையாடினேன்.

என்னை பொருத்தவரை போட்டியை டிரா செய்வதோ அல்லது போட்டியில் தோல்வி அடைவதோ ஒரு வாய்ப்பு இல்லை. வெற்றி பெறுவது என்பதே எனது மிகச்சிறந்த தேர்வாகும். எனக்குகிடைத்த வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை. இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதை விட எனக்கு வேறு எதுவும் மகிழ்ச்சி அளிப்பதும் இல்லை” என்றார்.

Views: - 0

0

0