உசைன் போல்ட் சாதனையை முறியடித்த கர்நாடக “கம்பலா” வீரர்…!

14 February 2020, 1:37 pm
Quick Share

2009 ஆம் ஆண்டு பெர்லின் நகரத்தில் நடந்த வேர்ல்ட் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டரை 9.58 வினாடிகளிலும் 200 மீட்டரை 19.19 வினாடிகளிலும் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் கடந்து உலக சாதனைப் புரிந்தார். நேற்று வரை இந்திய சாதனையை யாராலும் முறியடிக்க இயலவில்லை. உலகின் ஸ்பீட் மேன் என்று அவர் அழைக்கப்பட்டுவந்தார்.


அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் கர்நாடகா மாநிலம் தக்ஷிணா மாவட்டத்திலுள்ள மூடபிடரிப்பகுதியை சேர்ந்த 28 வயதான ஸ்ரீனிவாச கவுடா நேற்று ஒரு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பலாவில் எருமைகளுடன் சதுப்பு நிலத்தில் ஓடி வெற்றிப்பெறவேண்டும்.


இந்த போட்டியில் கலந்துக்கொண்ட ஸ்ரீனிவாச கவுடா 100 மீட்டரை 9.55 வினாடிகளில் கடந்துள்ளார்.142.5 மீட்டரை 13.62 வினாடிகளில் கடந்ததின் கணக்கைவைத்து இந்த வரையறைக் கொண்டுவரப்பட்டது. இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.