எதிர்பார்ப்பை எகிற விடும் இந்திய வீராங்கனைகள்… பூஜா ராணி, தீபிகா குமாரி அசத்தல்!!!

By: Babu
28 July 2021, 4:32 pm
pooja kumari -updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பூஜா ராணி மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் அபாரமாக செயல்பட்டுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் 120க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீரபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து மகளிர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல, தீபிகா குமாரி வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் பூடான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த போட்டியில் வென்றால் காலிறுதிக்குத் தகுதி பெறுவார்.

Views: - 211

0

0