டோக்கியோ ஒலிம்பிக் : பேட்மிண்டன் அரையிறுதியில் சிந்து போராடி தோல்வி : வெண்கலமாவது கைகூடுமா..?

Author: Babu
31 July 2021, 4:54 pm
Sindhu - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து போராடி தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீன-தைபே வீராங்கனை டாயை எதிர்த்து அவர் விளையாடினார். ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய சிந்து முதல் செட்டை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அபாரமாக ஆடிய டாய், யாரும் எதிர்பார்க்காத வகையில் 18-21 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக செயல்பட்ட டாய், 2வது செட்டையும் 12-21 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன்மூலம், 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்த சிந்துவிற்கு, தங்கப் பதக்கம் கனவு தகர்ந்தது. நாளை நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சிந்து, சீனா வீராங்கனையை எதிர்த்து விளையாட இருக்கிறார்.

Views: - 290

0

0