ஓய்ந்தது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அமெரிக்கா!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2021, 6:01 pm
இரண்டு வாரங்களாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. நிறைவு விழா கொண்டாட்டங்கள் 30 நிமிடங்கள் நடந்தன.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.
39 தங்கப்பதக்கம் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது. இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா, ஜப்பான், பிரிட்டன் மாதிரியான நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. இந்தியா இந்த பட்டியலில் 48-வது இடத்தை பிடித்துள்ளது.
0
0