60 பேரில் 4வது இடம்… நூலிழையில் பறிபோன பதக்கம்..!! இதுவே பதக்கத்திற்கு நிகர் என அதிதி அசோக்கிற்கு குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
7 August 2021, 12:25 pm
aditi ashok - golf - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.

ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக நடந்த கோல்ஃப் விளையாட்டு போட்டியின் தொடக்க நிலை சுற்றுகளில் இந்தியா வீராங்கனை அதிதி அசோக் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். இந்த முறை எப்படியும் பதக்கத்தை வெல்வார் என்று அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், பதக்கத்திற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 2வது இடத்தில் இருந்த அதிதி, போட்டியின் முடிவில் 4வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். இதன்மூலம், நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை அவர் தவறவிட்டார்.

ரியோ ஒலிம்பிக்கில் 41வது இடத்தை பிடித்திருந்த அதிதி, இந்த ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால், பதக்கத்தை ஜெயிக்காவிட்டாலும், இதுவே பதக்கத்திற்கு நிகரானது என்று அவருக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிதி அசோக்கிற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 769

0

0