ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!!

Author: Babu
29 July 2021, 5:43 pm
mary kom - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார்.

6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். எப்படியும் பதக்கம் வெல்வார் என்று அவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

அதனை நிரூபிக்கும் விதமாகவே விளையாடி, 51 கிலோ எடைபிரிவில் காலிறுதி முந்தைய சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கொலம்பியாவின் இங்கிரிட் லொரோனாவை எதிர்கொண்டு விளையாடினார் மேரிகோம். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மேரிகோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Views: - 206

0

0