அதே போட்டி… அதே பிளேஸ்.. 2020 ஒலிம்பிக்கை ரிப்பீட் செய்யும் தென்கொரியா வில்வித்தை அணி : இந்தியாவுக்கு 9வது இடம்!!

Author: Babu
23 July 2021, 11:40 am
archery south korea - updatenews360
Quick Share

ஒலிம்பிக் போட்டிகளில் வில்வித்தை பிரிவில் முதல் 3 இடங்களை தென்கொரியா மீண்டும் பிடித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று மாலை தொடங்குகிறது. முன்னதாக, வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் இன்று காலை நடைபெற்றது. அதில், இந்தியா, தென்கொரியா, இத்தாலி உள்பட பல்வேறு நாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மட்டும் 64 பேர் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர்.

இதில், முதல் மூன்று இடங்களை தென்கொரியா நாட்டு வீராங்கனைகளான ஆன் சான் (680), ஜாங் மின்ஹீ (677), காங் சே யங் (675) ஆகியோர் பிடித்துள்ளனர். இவர்களே கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் முதல் முன்று இடங்களை பிடித்தவர்களாவர். இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்து உள்ளார்.

கொரிய பெண்கள் அணி 2032 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளனர். மெக்சிகோ அணி 1976 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா 1970 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

கடந்த 2000ம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் மற்றும் 3வது இடத்தையும், 2004,2008,2016 மற்றும் 2020 ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் 3 இடங்களையும், 2012ம் ஆண்டில் முதல் இரு இடங்களையும் தென்கொரியாவே கைப்பற்றியது.

Views: - 238

0

0