ஐ.பி.எல் தொடரில் ஜொலிக்காத முக்கியமான இரண்டு வீரர்கள் : இந்திய அணியில் இருந்து நீக்கம்!!

12 November 2020, 4:12 pm
2 Players Out - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரில் சரியாக விளையாட காரணத்தால் முக்கிய இரண்டு வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2020 போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வழக்கம் போல மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக தட்டி சென்றது.

ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன. 3 ஒருநாள் போடி, 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால், இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் காயம் காரணமாக சில வீரர்கள் மாற்றப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் நடராஜன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதே போன்று ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளளனர். சிஎஸ்கே அணியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானர். நடப்பு சீசனில் 8 போட்டிகளை விளையாடிய ஜாதவ் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Kedar Jadhav declared fit for 2019 World Cup, to travel to England with  Team India - Sports News

அதே போல ஆர்சிபி அணியில் இடம்பெற்ற விஷம் துபே 11 போட்டியில் விளையாடி 129 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

NZ Vs IND, 5th T20I: Clueless Sivam Dube Concedes 34 Runs, Just Misses  Stuart Broad's Unwanted Record By 2 Runs

இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது,இவர்கள் இருவரும் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 33

0

0