ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி..!

19 August 2020, 12:24 pm
Quick Share

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, ஆர்பி லெய்ப்ஜிக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐரோப்பிய நாடுகளின் முன்னணி கால்பந்து அணிகள் மோதும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி சுற்று ஆக.16ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெர்மனியை சேர்ந்த பேயர்ன் மியூனிக், ஆர்பி லெய்ப்ஜிக், பிரான்சை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், ஒலிம்பிக்யூ லியோன் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா, ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் பரிதாபமாக வெளியேறின. இதனால் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், அரையிறுதிப் போட்டிகள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்குகியது. முதல் அரை இறுதியில் ஆர்பி லெய்ப்ஜிக் – பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.

எந்த அணி வென்றாலும், முதல்முறையாக யுஇஎப்ஏ சாம்பியின்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, ஆர்பி லெய்ப்ஜிக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

Views: - 40

0

0