சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் வரலாறு படைத்த இந்தியா: 16 தங்கம் உள்பட 47 பதக்கங்களை வென்று அசத்தல்!!

Author: Aarthi Sivakumar
22 November 2021, 12:57 pm
Quick Share

உகாண்டா: சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

உகாண்டாவின் கம்பலா நகரில் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆடவருக்கான எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுகந்த் கதம் நிலேஷ் பாலுவை எதிர்த்து விளையாடினார்.

இதில் சுகந்த் 21-16, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். எஸ்எல் 3 பிரிவு இறுதிச் சுற்றில் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிரமோத் பகத், சகநாட்டின் மனோஜ் சர்காரை எதிர்கொண்டார். இதில் பிரமோத் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

எஸ்எல் 3, எஸ்யு 5 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், பாலக் ஜோஷி ஜோடி இறுதிச் சுற்றில் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய ஜோடியான ருத்திக் ரகுபதி, மானஷி கிரிசந்திரா ஜோஷியிடம் வீழ்ந்தது. இந்தத் தொடரில் இந்தியா 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை குவித்தது.

Views: - 351

0

0