இப்படித்தான் விளையாடுவீங்களா..? கடுப்பில் ஜெர்சியை தூக்கி வீசியபான அம்பயர்… காலை பிடித்த பாகிஸ்தான் வீரர்..!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 1:24 pm
Quick Share

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் போது நடுவர் அலீம் தார் கடுப்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த பாகிஸ்தான் அணி 182 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 79 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து பேட் செய்து கொண்டிருக்கும் போது, நீயூசிலாந்து வீரர் அடித்த பந்து வாசிமிடம் சென்றது. உடனே அவர் எடுத்து அதனை பவுலர் திசையை நோக்கி எரிந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பந்து நடுவர் அலீம் தாரின் கால் பகுதியில் பலமாக தாக்கியது.

இதனால், கடுப்படைந்த நடுவர் அலீம் தார் கையில் வைத்திருந்த பவுலரின் ஜெர்சியை தரையில் ஓங்கி வீசிவிட்டு சென்றார். பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, நசீம்ஷா நடுவர் அலீம் தாரின் காலை பிடித்து தேய்த்து கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Views: - 138

0

0