எனது மாமாவை கொன்றவர்களை சும்மா விடக் கூடாது : பஞ்சாப் போலீசுக்கு ரெய்னா கோரிக்கை!!
1 September 2020, 1:52 pm13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இதற்காக, அனைத்து அணிகளும் கொரோனா வழிகாட்டு முறைகளுடன் ஆயத்தமாகி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி மற்றும் ரெய்னா அறிவித்ததை தொடர்ந்து, இந்தத் தொடரில் சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
யாரும் எதிர்பாராத நிலையில் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரெய்னா. இதனால், ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனிடையே, சொந்த காரணங்களுக்காக ஐ.பி.எல். தொடரில் இருந்து ரெய்னா விலகியதாகக் கூறப்பட்டு வந்தாலும், அணி நிர்வாகம் அறை ஒதுக்கியது பிடிக்காததால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், எனது மாமாவை கொன்றவர்களை சும்மா விடக் கூடாது என்று பஞ்சாப் போலீசுக்கு ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
மோசமான நிகழ்வினால் எனது பஞ்சாப் குடும்பம் நிலைகுலைந்து போய்விட்டது. எனது மாமா உயிரிழந்து விட்டார். எனது அத்தை மற்றும் அவரது மகன்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அதில், ஒருவர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்து விட்டார்.
இதுவரையில் அன்றிரவு என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவத்தை யார் செய்தது என்பது பற்றியும் எந்த தகவலில்லை. கொலையாளிகள் யார் என்பதை விரைவில் கண்டறிந்து பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற குற்றங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும், எனத் தெரிவித்தார்.
0
0