கிரிக்கெட் உலகில் இந்த நாள் இந்தியாவிற்கு சாதனையையும் ஆஸ்திரேலியாவிற்கு சோதனையும் கொடுத்த நாள்…!

24 March 2020, 3:38 pm
Quick Share

கடந்த 2013 ஆம் ஆண்டு இன்றைய தேதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டிற்கு எதிராக நடைப்பெற்று நிறைவேறி முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகளிலும் வென்று வைட் வாஷ் செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடம் வைட் வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது.


கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான செடேஸ்வர் புஜாரா இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியின் பொழுது மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்து கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இது ஒருப்புறமிருக்க கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் பொழுது பால் டாம்பெரிங் செய்த குற்றத்திற்காக அந்நாட்டு அணியின் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓரங்கு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply