அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்
10 September 2020, 11:02 amகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ரசிகர்கள் இல்லாமல் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 3 ஆண்டுகளுக்குப் பிறகு களத்திற்கு திரும்பிய பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவாவை எதிர்கொண்டு விளையாடினார்.
முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த செரீனா, பின்னர், அடுத்தடுத்த செட்களில் மீண்டெழுந்தார். 2வது செட்டை 6-3 என்ற கணக்கில் பிரோன்கோவை வீழ்த்தினார். இதனால், யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் 3வது செட் வரை ஆட்டம் சென்றது. இதில், 6-2 செட்கணக்கில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
0
0