அதிரடி காட்டிய உத்தப்பா மற்றும் ஷிவம் துபே.. 2வது முறையாக பெங்களூரு தோல்வி : மீண்டு எழுந்த சென்னை அணியின் முதல் வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 11:28 pm
Chennai Won - Updatenews360
Quick Share

இன்று நடைபெற்ற 22ஆவது ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடியது.

மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்தது.

இந்த நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய உத்தப்பா, சிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி, இருவரும் அரைசதம் அடித்தனர். உத்தப்பா 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன், 8 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், துபே 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் தொடர் தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ராவத் 12 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கோலியும் அவுட் ஆக பெங்களூரு அணி திணறியது.

பின்னர் வந்த வீரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் ஷாபாஷ் அகமது இணை நிதானமாக ஆடினர். மேக்ஸ்வெல் 26 ரன்னில் பெவிலியன் திரும்ப, பிரபுதேசாய் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

ஒரு பக்கம் நிதானமாக விளையாடி வந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் அவருக்கு இணையாக வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வித்தியாசத்தில் முதவ் வெற்றியை பதிவு செய்தது.

Views: - 1057

0

0