விராட் கோலியை அவுட் ஆக்கிய அனுஷ்கா : வைரலான வீடியோ.!!

17 May 2020, 7:38 pm
Virat Anushka - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வீட்டில் பொழுத போக மக்கள் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

இதே போல விளையாட்டு பிரபலங்களும் தங்கள் பொழுதை கழிக்க டிக் டாக், சவால்கள் என்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடினர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபொழுதை கழிக்க இருவரும் விளையாடிய காட்சிகள் அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அனுஷ்கா சர்மா பந்துவீச விராட் கோலி பேட்டிங் செய்கிறார். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலியை அவுட் ஆக்கிய அனுஷ்கா : வைரலான வீடியோ.!!

விராட் கோலியை அவுட் ஆக்கிய அனுஷ்கா : வைரலான வீடியோ.!!#ViratKohli #AnushkaSharma மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள -https://updatenews360.com

Update News 360 यांनी वर पोस्ट केले रविवार, १७ मे, २०२०