கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ. 11 கோடி நிதி திரட்டிய கேப்டன் கோலி, அனுஷ்கா சர்மா!

12 May 2021, 7:37 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா சேர்ந்து கொரோனா நிவாரண பணிகளுக்காக திரட்டிய தொகை ரூபாய் 11 கோடியை எட்டியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதன் நிவாரண பணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் நிதி திரட்டினர். அதில் அவர்களின் பங்கை ரூபாய் 2 கோடி ஏற்கனவே அளித்திருந்தனர். ரூபாய் ஏழு கோடி என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்ட கோலி மற்றும் அனுஷ்காவின் முயற்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இவர்கள் நிவாரண பணிக்காக மொத்தமாக ரூபாய் 11 கோடி சேர்ந்துள்ளது. எம் பி எல் விளையாட்டு அறக்கட்டளை இவர்களின் நிவாரண பணிகளுக்காக ரூபாய் 5 கோடி அளித்துள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை இந்திய கேப்டன் விராட் கோலி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களையும் விரைவாக எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடு திரும்பினார். இவர்கள் நிவாரண பணிக்காக நிதி திரட்ட துவங்கிய 24 மணிநேரத்தில் ரூ 3.6 கோடி நன்கொடையாகக் கிடைத்தது. இதற்காக கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை சமூக வலைதளம் மூலம் தெரிவித்திருந்தனர்.

Views: - 180

0

0