விராட் கோலி சமமாகச் சம்பளம் வாங்கவுள்ள இந்திய அணி ஏ+ வீரர்கள்!

14 January 2021, 9:31 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான சம்பளப் பட்டியலில் விராட் கோலிக்கு இணையாக ஏ+ பட்டியலில் உள்ள வீரர்களின் சம்பளத்தையும் பிசிசிஐ உயர்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ சம்பளம் நிர்ணயித்து வருகிறது. இதன்படி ஏ+ பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 7 கோடி சம்பளமாகக் கிடைக்கும். இந்த பட்டியலில் கேப்டன் கோலியுடன் 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் கோலிக்கு இணையாக தற்போது அவர்களின் சம்பளத்தையும் பிசிசிஐ உயர்த்தியுள்ளது.

இந்த ஆறு வீரர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இப்பட்டியலில் முதலில் உள்ள வீரர் சஹால். கடந்த 2020 டிசம்பரில் திருமணம் செய்து கொண்ட சஹாலுக்கு திருமணத்திற்குப் பின் அதிர்ஷ்டம் அடித்துள்ளது எனலாம். ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய சஹால் தற்போது பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளார். ஆனால் விரைவில் ஏ+ பிரிவில் சேர்க்கப்படவுள்ளார். இதனால் இவரின் ஆண்டு வருமானம் ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 7 கோடியாக அதிகரிக்கவுள்ளது.

இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவர் கே. எல். ராகுல். தற்போது இவர் காயமடைந்துள்ளார். ஆனால் இவரின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. தற்போது ஒப்பந்த பட்டியலில் ஏ பிரிவில் ராகுல் இடம் பெற்றுள்ளார். இவரின் பெயர் தற்போது ஏ+ பிரிவில் சேர்க்கப்படவுள்ளது. இதனால் இவரின் சம்பளம் ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 7 கோடியாக அதிகரிக்கவுள்ளது. மூன்றாவது இடத்தில் இந்த பட்டியலில் இணையவுள்ளவர் அஜிங்கியா ரஹானே. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கிய வீரராக உள்ள ரஹானே ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இவரின் செயல்பாட்டிற்குக் கிடைத்த பரிசாகவே இதைப்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளார். விரைவில் இவரின் சம்பளம் 5 கோடியில் இருந்து 7 கோடியாக அதிகரிக்கவுள்ளது.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்படவுள்ளார். இவர் டி-20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் இவர் ஏ பிரிவில் இருந்து ஏ+ பிரிவுக்கு முன்னேற்றம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா இருவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்டனர்.

Views: - 7

0

0