ஐசிசி ஒருநாள் தரவரிசை: நம்பர்-1 இடத்தில் நீடிக்கும் கிங் கோலி!

27 January 2021, 10:31 pm
Quick Share

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகக் கடைசி இரண்டு இன்னிங்சில் 89 மற்றும் 63 ரன்கள் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பவுலர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மாவால் பங்கேற்க முடியாமல் போனது. இருந்தாலும் தனது இரண்டாவது இடத்தை ரோஹித் தக்கவைத்துக் கொண்டார். இவர் மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தானின் பாபர் அசாமை (837 புள்ளிகள்) விடக் கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் .


நியூசிலாந்தின் ராஸ் டைலர் (818) மற்றும் ஆஸ்திரேலியாவின் கேப்டனான ஆரோன் பின்ச் (791) ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். இதேபோல் பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 3 வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளரான டிரெண்ட் பவுல்ட் (722), ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரகுமான் (701) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹாசன்மிராஜ் தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். முஸ்தபிசுர் ரஹ்மான் 19வது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறினார். இதேபோல மற்ற வங்கதேச அணி வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன்மூலம் தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Views: - 0

0

0