தொடரும் கோலியின் சத வேட்டை…. கிரேம் ஸ்மித்தை முந்தி அசத்தல்!

26 March 2021, 3:51 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 41 ரன்கள் எடுத்த போது முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான கிரேம் ஸ்மித்தின் சாதனையை தகர்த்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கோலி இந்த முறையும் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதில் கோலி 41 ரன்கள் எடுத்த பொழுது தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித்தின் சாதனையைத் தகத்தார். கோலி சர்வதேச ஒருநாள் அரங்கில் கேப்டனாக 5432 ரன்கள் அடித்து ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி சர்வதேச அளவில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் 5416 அடித்துள்ளார். இந்த வரிசையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 8497 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை பாண்டிங் 234 ஒருநாள் போட்டிகளில் எட்டி அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார். மேலும் இந்த போட்டியில் அரைசதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக நான்கு ஒரு இன்னிங்சில் அரைசதம் கடந்து அசத்தினார். இதை ஒருநாள் கிரிக்கெட்டில் ஏழாவது முறையாக எட்டி கோலி புதிய சாதனை படைத்துள்ளார். தவிர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 2வது இடம் பிடித்தார். இவர் இந்த போட்டியில் 3-வது வீரராகக் களமிறங்கி 66 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது வீரராகக் களமிறங்கி பத்தாயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக ரிக்கி பாண்டிங் 12662 ரன்களை அடித்துள்ளார். தற்போது இவரைத் தொடர்ந்து கோலி 2வது இடம் பிடித்துள்ளார்.

Views: - 118

0

0