அச்சு அசல் கோலி போலவே வந்த ரசிகர்… வைரலான போட்டோ!

5 March 2021, 7:43 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி போலவே அச்சு அசலாக காட்சியளிக்கும் நபர் ஒருவர் நரேந்திர மோடி மைதானத்தில் சுற்றிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து 89 ரன்கள் முன்னிலை பெற்றது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்‌ஷர் படேல் (11) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியை காண விராட் கோலியை போலவே காட்சியளிக்கும் நபர் ஒருவர் மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் பொறுத்த வரையில் கடந்த 2020 முதல் சரியான பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்தில் டக் அவுட் ஆனார்.

இதன் மூலம் இந்த தொடரில் கோலி ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது முறையாக அவுட்டானார். முன்னதாக சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி, கோலியை டக் அவுட்டாக்கினார். மேலும் இந்திய அணியின் கேப்டனாக அதிக டக் அவுட்களை பதிவு செய்த தோனியின் சாதனையை கோலி சமன் செய்தார்.

Views: - 48

0

0