இந்த ஆண்டிற்கான IPL டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விவோ வெளியேற்றம் | காரணம் என்ன?

5 August 2020, 8:08 am
Vivo Pulls Out of IPL Title Sponsorship for This Year
Quick Share

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன விவோ 2018 முதல் IPL விளையாட்டின் ஸ்பான்சராக இருந்து வருகிறது. ஆனால் நிறுவனம் இந்த ஆண்டு T20 போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்வதில் இருந்து விலகியுள்ளது. தகவல்களின்படி, விவோ பிசிசிஐ உடனான தனது 5 ஆண்டு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தை நிறுத்தவில்லை, மேலும் 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் போட்டிகளுக்கு நிதியுதவி செய்யும்.

இந்தியாவுக்குள் அதிகரித்து வரும் சீன எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு சீன நிறுவனமான விவோ ஸ்பான்சராக இருப்பதற்கு எதிராக அதிகரித்து வரும் கண்டங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த ஆண்டின் IPL போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறுகின்றன.

பி.சி.சி.ஐ-யின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த ஒருவை Money Control க்கு அளித்த தகவலின் படி, விவோ வெளியேறுவதற்கு முக்கிய காரணம், நிறுவனம் இந்த வருட ஸ்பான்சர்ஷிப்க்கு குறைந்த தொகையை மட்டுமே செலுத்தப்போவதாகக் கூறியதுதான்.

விவோ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ரூ.440 கோடி ரூபாய் செலுத்த வேண்டும், ஆனால் விவோ நிறுவனம் இந்தியாவில் நிலவி வரும் சீன எதிர்ப்பு உணர்வுகள் காரணமாக மோசமான விற்பனையை மேற்கோள் காட்டி 130 கோடி ரூபாயைக் குறைக்கச் சொல்லி கேட்டது. இது நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து  வெளியேறியதற்கான காரணம் ஆகும்.

அடுத்த மூன்று நாட்களில் இந்த ஆண்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான டெண்டரை பி.சி.சி.ஐ வெளியிடும், பின்னர் போட்டிகளுக்கான ஸ்பான்சரை முடிவு செய்யும் என்று அந்த நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

IPL 2020 செப்டம்பர் 19 முதல் 53 நாட்களுக்கு நடக்க உள்ளது, இதன் இறுதிப் போட்டி நவம்பர் 2020 அன்று நடைபெற உள்ளது. பிற்பகல் போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணி முதல், மற்றும் மாலை போட்டிகள் இரவு 7:30 மணி முதல் நடைபெறும்.

Views: - 0 View

0

0