“இந்த விசயத்துல அவர அடிச்சுக்க ஆளே இல்ல…!” – என்றைக்கும் ரஞ்சியின் கிங்காக இருக்கும் VVS லக்ஷ்மன்…!

14 February 2020, 3:21 pm
Quick Share

தற்போது இந்தியாவில் பரபரப்பாக நடைப்பெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் நேற்று அருணாச்சல பிரதேஷ் மற்றும் மேகாலயா அணிகள் மோதின. அருணாச்சல பிரதேஷ் அணியைச் சேர்ந்த ராகுல் தலால் இரண்டாவது இன்னிங்சில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டின் மூலம் மிகவும் எதிர்பார்த்த சாதனை கனவு தகர்க்கப்பட்டது.


ஒரு ரஞ்சிக்கோப்பை சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 1415 ரன்களுடன் VVS லக்ஷ்மன் முதலிடத்திலுள்ளார். இந்த முறை ராகுல் தலால் இந்த சாதனையை எப்படியும் முறியடித்துவிடுவாரென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன் 88 ரன்கள் மட்டுமே எடுக்கவேண்டுமென்ற நிலை இருந்தது.


ஆனால் 13 ரன்களில் அவுட்டாகி தற்போது இரண்டாவது இடத்திலுள்ளார். இந்த பட்டியலில் 1331 ரன்களுடன் மூன்றாவது இடத்தில மில்நட் குமாரும் நான்காவது இடத்தில ஷ்ரேயாஸ் ஐயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேனான VVS லக்ஷ்மணனை “இந்த விசயத்துல அவர அடிச்சுக்க ஆளே இல்ல” என்று புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply