அனல் பறந்த இந்தியா – ஆஸி., போட்டி : மைதானத்தில் கூலாக ‘புட்டபொம்மா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வார்னர்!! (வீடியோ)

28 November 2020, 1:24 pm
warner - updatenews360
Quick Share

9 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி முதல்சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிறகு 374 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, இமலாய இலக்கை நோக்கி இந்திய அணி பேட் செய்தது. அப்போது, பவுண்டரி எல்லைக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னரை பார்த்து, புட்டபொம்மா நடனம் தொடர்பாக குரல்களை எழுப்பினர்.

இதைக் கேட்ட வார்னர், புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடுவது போன்ற ஸ்டெப்புகளை போட்டார். இது மைதானத்தில் இருந்த ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

இந்தியாவை அதிகம் விரும்பும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவாக இருப்பவர் வார்னர். இவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய பாடல்களுக்கு நடமாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, வார்னர் ஆடிய புட்டபொம்மா பாடல் பயங்கர டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Courtesty

மேலும் பார்க்க :

Views: - 0

0

0