“எங்களது தேசம் ஒரு பேராசை மற்றும் இரக்கமற்ற தேசம்” – பிரபல கிரிக்கெட் வீரர் வருத்தம்…!

22 March 2020, 9:11 am
Quick Share

உலகத்தின் அழிவின் ஆரம்ப புள்ளியாக வர்ணக்கப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸால் சீனா, ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகள் மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்தியாவில் இன்று வரை ஐந்து உயிர்களை கொரோனா வைரஸ் சூறையாடியுள்ளது.


இந்தியாவிற்கு அருகாமையிலுள்ள வங்க தேசத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளது. அதில் இரண்டும் பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் குணமடைந்துள்ளன. இது ஒரு தொற்று நோயென்று அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டிலுள்ள பிரபல பாலியல் தொழிற்கூடத்தை பதினைந்து நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் அந்நாட்டில் விற்பதும் சுகாதாரப்பொருட்களின் எண்ணிக்கை பெருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹுசைன் “எங்களது தேசம் ஒரு பேராசை மற்றும் இரக்கமற்ற தேசம். இங்குள்ள வியாபாரிகள் தான் உண்மையான கொரோனா வைரஸ்.” என்ற ஆவேசமான பதிவை பகிர்ந்துள்ளார்.