கோலிக்காக தோனி செய்த காரியம் : டி20 உலகக் கோப்பையை Confirm? மெச்சும் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2021, 8:06 pm
Dhoni and Kohli-Updatenews360
Quick Share

இந்திய அணியின் அறிவுரையாளராக செயல்படுவதற்கு தோனி எந்தவித ஊதியமும் வாங்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில்டி வரும் 17-ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்த அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அறிவுரையாளராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்து இருந்தது. பிசிசிஐ-யின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அறிவுரையாளராக செயல்படுவதற்கு எம்.எஸ்.தோனி தனது பணிக்காக எந்த விதமான அங்கீகாரமும், ஊதியமும் கேட்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

வரும் 24-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் பலபரிச்சை செய்கிறது. இந்த டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறார். எனவே, இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிக முக்கியமான தொடராகும்.

டி20 அணி கேப்டனாக தனது கடைசி தொடராக அமைந்துள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் கோலி. அத்துடன், இந்த தொடரில் ஆலோசகராக செயல்படுவதால் இன்னும் இந்த தொடர் முக்கிய வாய்ந்தவையாக அமையும்.

தோனியின் மாஸ்டர் மைண்டும், கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து இந்த டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள் என்று ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Views: - 186

0

0