ரோகித்துடன் ஓப்பனிங் கூட்டணி ஏன்? :‘கிங்’கோலி சொன்ன பதில் என்ன தெரியுமா?

Author: Udhayakumar Raman
20 March 2021, 11:43 pm
Quick Share

ஐந்தாவது டி-20 போட்டியில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கியது ஏன் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதன் முதல் நான்கு போட்டியின் முடிவில் 2-2 என தொடர் சமநிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி-20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.

இதில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியத. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி -20 தொடரை இந்திய அண் 3-2 என கைப்பற்றி கோப்பை வென்று சாதித்தது. தவிர, டி20 கிரிக்கெட்டில் நம்பர்-1 அணியான இங்கிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கும் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்து சாதித்தது.

இவர்கள் இல்லாமல்
இந்த வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் சிறந்த வெற்றி. ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் இந்திய அணி 224 ரன்கள் குவித்துள்ளது.

மாறுபட்ட ரோகித்
ரோகித் சர்மாவும் நானும் துவக்கத்தில் களமிறங்கியதால் இருவரும் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இந்த போட்டியில் முற்றிலுமாக மாறுபட்ட ரோகித் சர்மாவை காண முடிந்தது. அவர் ஒருபுறம் விளாச நான் நிதானமாக காத்திருந்தேன். இருவரில் ஒருவர் களத்தில் இருந்தால் அது மற்ற வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும். ரோகித்திற்கு பின் சூர்யகுமார் யாதவும் இங்கிலாந்து அணியிடம் இருந்து போட்டியை எடுத்துச் சென்றார். இறுதியாக நானும், ஹர்திக் பாண்டியாவும் இதை முடித்து வைத்தோம்.

ஓரளவு ரெடி
இந்திய அணியில் தற்போது பலமான மிடில் ஆர்டர் உள்ளது. அதனால் இரு சிறந்த வீரர்களுக்கு அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைத்தோம். அதனால் ரோகித் சர்மாவுடன் துவக்கத்தில் கைகொடுக்க முடிவு செய்தேன். முன்பும் பல இடத்தில் நான் பேட்டிங் செய்துளேன். எதிர்வரும் தொடர்களில் இது எப்படி கைகொடுக்கிறது என காத்திருந்து பார்க்க வேண்டும். உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஓரளவு தயாராகிவிட்டது” என்றார்.

Views: - 138

0

0