இன்று களமிறங்குவாரா ரோகித்… எதிர்பார்க்கப்படும் இந்திய லெவன் அணி!

14 March 2021, 10:21 am
Quick Share

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில் துவக்க வீரர் ரோகித் சர்மா களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் சொதப்பப் படு மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

கடும் விமர்சனம்
முதல் டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்ட ஷிகர் தவன், ராகுல் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதன் விளைவாக இந்திய அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலியை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இது கேப்டன் கோலிக்கும் பொருந்துமா? : சவுக்கடி கேள்வி கேட்ட சேவாக்!

வருவாரா ரோகித்
இதையடுத்து இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இதற்கு இரண்டு சாத்தியங்கள் உள்ளன. ஒன்று ஷிகர் தவன் அணியில் இருந்து விலகி ரோகித்துக்கு வழிவிடுவது அல்லது ராகுல் மிடில் ஆர்டருக்கு மாற்றப்படுவது. இதில் தவன் வழிவிடுவதே முதல் தேர்வாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.

பவுலர்கள் கூட்டணி
அதே போல முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்களைக் கொண்டு களமிறங்கியது. இது எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை. அதே நேரம் இங்கிலாந்து அணியின் ஒரு சுழற்பந்துவீச்சாளர், 2 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி அவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளித்தது.

ஒரே ஓவரில் 4 சிக்சர்கள்… மாஸ் காட்டிய யுவராஜ்: சச்சினும் அரைசதம்!

இதனால் இந்திய அணியும் இன்று இந்த உக்திக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஒரு சுழற்பந்துவீச்சாளர் ஆல் ரவுண்டர் மற்றும் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் எனகூறப்படுகிறது. சுழற்பந்துவீச்சாளர் இடத்திற்கு யுஸ்வேந்திர சாஹல் வழக்கமான தேர்வாக இருப்பார்.

எதிர்பார்க்கப்படும் இந்திய லெவன் அணி:
ரோகித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி (கே), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபர் சஹார், புவனேஷ்வர் குமார், சார்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல்.

Views: - 35

0

0